Header image alt text

இதன்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருககும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும்

Read more

25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
தோழர் நடேசன் அவர்கள்,
கழகத்தின் மன்னார் மாவட்ட முதலாவது தளபதியாக செயற்பட்டவர்.

Read more

25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்  அச்சீட்டுப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த வர்த்தமானி வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என அவர் கூறினார். Read more

நியூசிலாந்தின் துணை பிரதமரும் வௌிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(24) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பாரென வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் நியூசிலாந்தின் துணை பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். Read more

கொழும்பு- வெள்ளவத்தையில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தலின் போது குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பினரால் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அமைப்பினர் நேற்றையதினம் (24) நீர்கொழும்பிலுள்ள தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க அமைப்பிற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். Read more