Header image alt text

நிறைவுகாண் வைத்திய சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஆய்வுகூடப் பரிசோதனை மற்றும் உடற்கூற்று நிபுணர்கள் சேவை என்பன ஸ்தம்பிதமடைந்துள்ளன. 2 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிறைவுகாண் வைத்திய சேவை ஊழியர்கள் இன்று(27) காலை 8 மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மற்றும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற மாணவர்களை நிறைவுகாண் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. Read more

வௌிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து வழங்கியமை தொடர்பில் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிரல் அடையாளம் இன்றி கெஹெல்பத்தர பத்மேவின் கடவுச்சீட்டை குறித்த அதிகாரியே தயாரித்து வழங்கியிருக்கலாமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. Read more