Header image alt text

போலந்து நாட்டின் வௌிவிவகார அமைச்சர் Radosław Sikorski 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(28) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வௌிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட தரப்பினரால் அவர் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். போலந்து வௌிவிவகார அமைச்சர் இன்று(28) பிற்பகல் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். Read more

இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினர் மற்றும் இலங்கையின் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் புதுடில்லியில் நேற்று(27) நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தனர். குறித்த தரப்பினர் இந்திய லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உதவி சபாநாயகர், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். Read more