Header image alt text

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் நேற்று(28) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சேர்ப்பு செயற்பாட்டில்  நிலவும் தாமதத்திற்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(30) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. வௌ்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருளை சிறைச்சாலைக்குள் கொண்டுவருவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருளை உறுதியாக அடையாளம் காண்பதற்கும் அதன் எடையை மதிப்பிடுவதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி திசாநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக கரம்போர்ட் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று(29) அறிவிக்கப்பட்டது. Read more