நிறைவுகாண் வைத்திய சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஆய்வுகூடப் பரிசோதனை மற்றும் உடற்கூற்று நிபுணர்கள் சேவை என்பன ஸ்தம்பிதமடைந்துள்ளன. 2 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிறைவுகாண் வைத்திய சேவை ஊழியர்கள் இன்று(27) காலை 8 மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மற்றும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற மாணவர்களை நிறைவுகாண் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. Read more
வௌிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து வழங்கியமை தொடர்பில் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிரல் அடையாளம் இன்றி கெஹெல்பத்தர பத்மேவின் கடவுச்சீட்டை குறித்த அதிகாரியே தயாரித்து வழங்கியிருக்கலாமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சந்தேகம் வௌியிட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, “மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை” என்றார். இது தொடர்பாக இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்கு மேல் – ஆட்சியில் இருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறுகிறார். நேற்று முன்தினம் (24) ஊடகவியலாளர்களிடம் பேசிய பண்டார, பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள் மற்றும் புத்திஜீ
நாடு முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளர்களின் உயிர்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
இதன்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் அச்சீட்டுப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த வர்த்தமானி வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என அவர் கூறினார்.