நியூசிலாந்தின் துணை பிரதமரும் வௌிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(24) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பாரென வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் நியூசிலாந்தின் துணை பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். Read more
கொழும்பு- வெள்ளவத்தையில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தலின் போது குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பினரால் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அமைப்பினர் நேற்றையதினம் (24) நீர்கொழும்பிலுள்ள தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க அமைப்பிற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குருணாகல் பகுதியிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு(23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 17 பெண்களும் 4 ஆண்களும் விபத்தில் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என அமைச்சு கூறியுள்ளது.
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வியாழக்கிழமை (22) ஒன்பதாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு, வியாழக்கிழமை (22) மாலை சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தில் கடந்த 08 ஆண்டுகளாக நிலவும் 27 உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளை மீளாய்வு செய்வதற்கான குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் பிராந்திய நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதில் தடைகள் காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மென்டிஸ் தெரிவித்தார்.
வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 20 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். குறித்த 20 பேரும் தலைமறைவாகியுள்ள நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க நிறம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 2 பெண்களும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைத்தல் மற்றும் அந்த காணியுடன் தொடர்புடைய செயற்பாடுகளை பிரச்சினைகளின்றி முன்னெடுப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
21.05.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குமாரப்பெருமாள் பேரின்பம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….