வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று அனுமதி வழங்கியிருந்தார். Read more
கல்கிஸ்ஸை பகுதியில் அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை – ஓடியன் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளால் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி இன்று நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தின் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஒன்றினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள நெக்ஸ்ட் என்ற ஆடை உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டமையினால் அங்குப் பணியாற்றிய 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய முடியாமையால் குறித்த தொழிற்சாலையை மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.
அதிவேக வீதிகளில் வங்கி அட்டைகள் ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தும் வசதி இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. தெற்கு அதிவேக வீதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் மத்திய அதிவேக வீதியின் குருநாகல், மீரிகம ஆகிய பகுதிகளில் வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா(முல்லை), வசந்த்(யாழ்), மாதவன்(தலைவர்-ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன் – தள இராணுவப் பொறுப்பாளர்), சாமி(தம்பியப்பா பாஸ்கரன் -யாழ்), சைமன்(யாழ்), பிரபு(முல்லை), மரியான்(மன்னார்), பாபு(ஜெஸ்மின்- திருமலை), ரவீந்திரன்(மன்னார்), நந்தீஸ்(மன்னார்), சிறி(முசுறி -மன்னார்), சுதன்(வவுனியா), சுகுணன்(வவுனியா), யூலி(மன்னார்), பி.எல்.ஓ(வவுனியா), பேணாட்(வவுனியா), சீலன்(மன்னார்), சசி(வவுனியா), அத்தான்(யாழ்), தேவன்(கிளிநொச்சி),
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் மே 24 ஆம் திகதி அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்களில், 40 வீதமானோர் தொடர்பான தகவல்கள் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் குற்றவாளி யார் என தமக்குத் தெரியும் என்று பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.