போதைப்பொருள் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 10 குழுக்களுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று(20) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். Read more
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று(20) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் செவ்வாய்க்கிழமை (20) அன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார், பளை பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் உடன் சென்ற கனரக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். எனினும், கனரக வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளது.
19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……
தெஹிவளை நெதிமால பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது இன்று(19) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று(9) உத்தரவிட்டது. தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்ஸ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைக் கைது செய்துள்ளது. 28 வயதான முன்னாள் இலங்கை விமானப்படை வீரர் ஆகிய சந்தேக நபர், கொட்டாவ விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரிசீலிக்கப்படாது என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2025ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து காயப்பட்ட மக்களை வவுனியா வைத்தியசாலையில் கொண்டு வந்து குவித்த வண்ணமும் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிய வண்ணமும் இருந்தார்கள் மருத்துவ உதவி நிறுவனங்களும், தொண்டர்களும் இராணுவத்தினரும். இக்கால கட்டத்தில் புளொட் தோழர்கள் வைத்தியசாலையிலும் முகாங்களிலும் இருந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு வசதிகளையும் வேறு அத்தியாவசிய தேவை வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.