முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக முன்னெடுக்கப்படும் ஊர்தி பவனி இன்றைய தினம் வவுனியாவை அடைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது. Read more
கொழும்பு கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர். வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும், பெண்ணும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் – விலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் பின்னர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். உயிர்மாய்த்துக் கொண்ட சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இற்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
யாழ். அரியாலை செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காகக் குழிகள் வெட்டப்பட்ட போது, அதற்குள் இருந்து மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்டன.
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிக்கு ஏனைய தரப்புகள் ஆதரவளிக்கும் வகையிலான, உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம்,
இலங்கை மற்றும் செக் குடியரசுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் செக் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஜூரி கோசாக் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.