கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் எக்ஸிம் வங்கி(EXIM Bank) இடையே இருதரப்பு திருத்தப்பட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கடன் வசதி மற்றும் கடன் பெறுவதற்கான வசதி தொடர்பிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வௌியிட்டுள்ளது.
14.05.1998இல் வவுனியா கோவில்குளம் தாக்குநலில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை – கம்பர்மலை சந்தியிலும் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.
ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தவறான எண்ணக்கருவில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி குறித்து, அரசாங்கம் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் இன்றும்(14) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(14) யாழ்.வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி பரிமாறலும் இடம்பெற்றது.
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் தண்டனை அனுபவித்த வருடமொன்றுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஒரு வார மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கேட்கவில்லை. ஜனநாயக முறைப்படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவான சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் என்ற வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
புங்குடுதீவு மாணவி வித்யா கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.