Header image alt text

20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 44ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார்.

Read more

01.06.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் நாதன் (குமார்) (சிதம்பரநாதன்- பண்ணாகம்) அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் வழிப்பாட்டுத் தலமொன்றின் தீர்த்தக்கேணியில் தவறி வீழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். நிழற்​படம் எடுப்பதற்காகச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த15 வயதான 2 சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். Read more

யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராகப் பணிபுரிந்த நிலையில் அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த  சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரனின் மகனான அக்ஷய், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று (01) உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துத் துயரங்கள் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

Read more