Header image alt text

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று திங்கட்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

Read more

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உத்தரவிடக்கோரி, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு ஏ.எச்.எம்.டி.நவாஸ், அர்ஜூன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

Read more

பாணந்துறை வலான கெமுனு மாவத்தை பகுதியில் இன்று(02) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. Read more

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (02) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  போட்டி பரீட்சை நியமனம் வழங்கக் கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. Read more

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று(02) ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்தது. இதற்கிணங்க ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு 50 வீதம் பெரும்பான்மை பெற்ற 161 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பணிகள் இன்று(02) ஆரம்பமாகவுள்ளன. தனிப்பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு  உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களின் வழிநடத்தலின் கீழ் ஆட்சியமைப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read more