Posted by plotenewseditor on 3 June 2025
Posted in செய்திகள்
அவுஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான Richard Marles உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்தார். இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலிய துணை பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திக்கவுள்ளதுடன் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.