கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, துப்பாக்கிதாரி என கூறப்படும் சமிந்து தில்ஷான் என்ற சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அடையாளங் காண்பதற்காக இரு சாட்சியாளர்கள் முன்னிலையானதுடன், அவர்களால் சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அன்றைய தினம் சந்தேகநபரை ஸ்கைப் தொழிநுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டது.