Posted by plotenewseditor on 4 June 2025
Posted in செய்திகள்

பதவி உயர்வு மற்றும் இணை சுகாதார பட்டதாரிகளின் ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்துத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை காலை 8 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். அதன்படி, கலந்துரையாடலின்றி வேலைநிறுத்தத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.