 05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுகள்…
05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுகள்…
 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
		     தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.
தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி இது தொடர்பில் உரையாற்றினார்.
அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி இது தொடர்பில் உரையாற்றினார். உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று காலை கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் ஆரம்பமானது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர். அத்துடன், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் சுற்றாடல் வாரத்தையும் அறிவித்துள்ளது. இதனிடையே சுற்றுலா விடுதிகளைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மையைப் பேணும் நோக்கில் விடுதி கடற்கரை பராமரிப்பாளர்களை நியமிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று காலை கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் ஆரம்பமானது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர். அத்துடன், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் சுற்றாடல் வாரத்தையும் அறிவித்துள்ளது. இதனிடையே சுற்றுலா விடுதிகளைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மையைப் பேணும் நோக்கில் விடுதி கடற்கரை பராமரிப்பாளர்களை நியமிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.