சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்கள் தொடர்பில் வெளியான கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரித்ததுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகொட இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்களில் ஆயுதங்கள்,போதைப்பொருள் அல்லது தங்கம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரிக்கின்றது.

அத்துடன் இறக்குமதியாளர்களால் அறிவிக்கப்பட்ட தொழில்சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு மட்டுமே சரக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதையும் சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அனைத்து துணை இறக்குமதி ஆவணங்களின் விரிவான சரிபார்ப்பிற்குப் பின்னரே கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

மேலும், எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களோ அல்லது கடத்தல் பொருட்களோ இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.” என்று கூறியுள்ளார்.