சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை(11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(10) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு(09) கைது செய்யப்பட்டிருந்தார். Read more
10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று.. 1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.
தோழர் சங்கர் (தம்பிராசா ராஜதுரை) அவர்களின் 28ம் ஆண்டு நினைவுகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை சிலருக்கு வயித்தெரிச்சலைக் கிளப்பிவிட்டுள்ளது, அவர்களைப் புலம்ப வைத்துள்ளது என்பது உண்மையே. இன்று காணக் கிடைத்த இணையத்தள பத்திரிகையின் பதிவு ஒன்றில் இருந்து அதனை தெரிந்து கொள்ள முடிந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று(09) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். சுங்கத்தில் சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று(09) காலை 10 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.