Header image alt text

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசுக் கட்சியும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் முதலாம் பகுதியாராகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரண்டாம் பகுதியாராகவும் சேர்ந்து ஆட்சியமைப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். Read more

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் மூவரடங்கிய குழு இன்று(11) சாட்சி விசாரணையை ஆரம்பித்தது. 2023ஆம் ஆண்டு வெலிகமவிலுள்ள ஹோட்டலொன்றின் மீது துப்பாக்கிப் பிர​யோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் போது உயர்திகாரிகள் தவறான பணிப்புரைகளை விடுத்ததாக மூவரடங்கிய குழு முன்னிலையில் இன்று(11) சாட்சியமளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி அன்சலாம் டி சில்வா தெரிவித்தார். Read more

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் பிரதான சூத்திரதாரியான இராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வு பெற்ற பிரகேடியர் ஷம்மி குமாரரத்ன சாட்சியாளர் ஒருவருக்கு அழுத்தம் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று(11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். Read more

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.  குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. Read more