 இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இன்று(12) பிற்பகல் இடம்பெற்ற விமான விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனும் அனுமானத்திற்கு வந்துள்ளதாக  குஜராத் மாநில தலைமை பொலிஸார் அறிவித்துள்ளனர். விமானத்தில் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர்களில் 169 இந்திய பிரஜைகளும் 53 பிரித்தானியர்களும், 07 போர்த்துக்கல் பிரஜைகளும் கனேடியர் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல் வௌியாகியுள்ளது. Read more

 ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் ஜேர்மனி ஜனாதிபதிகள் இருவரும் நேற்று சந்தித்திருந்தனர். இந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கிடையேயான நீண்ட கால உறவு, பொருளாதார வளர்ச்சி, ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜேர்மனி ஜனாதிபதி Frank-Walter Steinmeier தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

		     குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஜனாதிபதி பொது மன்னிப்பை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழுக்களால் சிறைச்சாலைகளிலுள்ள ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.