கைது செய்யப்பட்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காக அவர் இன்று(13) மீண்டும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். Read more
தேசிய லொத்தர் சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக செயற்பட்ட துசித்த ஹல்லொலுவ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று(13) கைப்பற்றியது. ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைத்தது. யாழ் மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று(13) காலை நடைபெற்றது. வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் மேயர் தெரிவு இடம்பெற்றது.