Header image alt text

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று(15) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளரொருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். Read more

ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(15)  முற்பகல் நாட்டை வந்தடைந்தார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனி ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வர்த்தக சபையின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்ததுடன் சுற்றுலாத்துறை பிரதானிகளையும் சந்தித்தார். Read more

இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் நாடு திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2 நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் வான்வௌிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. Read more