வவுனியா மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யயப்பட்ட தோழர் காண்டீபன் மற்றும் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தோழர் அருண் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன் வவுனியா மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி ஆகியோர் மாநகர சபை ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கட்சியின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செயலதிபரின் நினைவில்லத்தில் அஞ்சலி செலுத்தினர். Read more
வவுனியா மாநகரசபையின் முதலாவது மேயராக எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் (தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளர்) தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் இன்று தெரிவு செய்யப்பட்ட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு மாநகர ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று(16) காலை ஆரம்பமானது. தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தஸாரின் பெயரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீசா ஸரூக்கின் பெயரும் கொழும்பு மேயர் பதவிக்கு முன்மொழியப்பட்டன.