Header image alt text

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டு பணியாளரான நிபுனி கிருஷ்ணஜினா எனும் பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயசிங்க இன்று(17) பிணை உத்தரவை பிறப்பித்தார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் சமர்ப்பித்தது. சந்தேகநபர் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர். Read more

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனையை முன்வைப்பதற்கு சட்ட மாஅதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று(17)  கால அவகாசம் வழங்கியது. Read more

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more