 18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார். 
		     கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் இன்று(18) தமது கடமைகளை பொறுப்பேற்றார். கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதியமைச்சர் சுனில் வட்டகல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் சர்வ மத ஆசீர்வாதத்துடன் மேயர் கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவும் இன்று(18) கடமைகளை பொறுப்பேற்றார்.
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் இன்று(18) தமது கடமைகளை பொறுப்பேற்றார். கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதியமைச்சர் சுனில் வட்டகல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் சர்வ மத ஆசீர்வாதத்துடன் மேயர் கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவும் இன்று(18) கடமைகளை பொறுப்பேற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய இதற்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பிரதானியாக கடமையாற்றினார். இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய இதற்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பிரதானியாக கடமையாற்றினார். இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) முற்பகல் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத்தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) முற்பகல் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத்தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மாதம்பை பிரதேசத்தில் சிலிக்கா மணல் அகழ்விற்காக மீண்டும் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் சுற்றாடல் ஆய்வறிக்கையை கோருவதே உகந்தது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் மாதம்பை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சுற்றாடல் நீதிக்கான மையம் மற்றும் பிரதேசவாசிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று(18)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.
மாதம்பை பிரதேசத்தில் சிலிக்கா மணல் அகழ்விற்காக மீண்டும் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் சுற்றாடல் ஆய்வறிக்கையை கோருவதே உகந்தது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் மாதம்பை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சுற்றாடல் நீதிக்கான மையம் மற்றும் பிரதேசவாசிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று(18)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.