 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9,190 வரை அதிகரித்துள்ளது. நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள தரவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நிறுவனப் பராமரிப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் தெருவோரக் குழந்தைகளுக்காக 5,000 ரூபா உதவித்தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.