தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கும், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ மற்றும் அதன் ஏனைய பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (21) நள்ளிரவு 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பரீட்சைகள் திணைக்களமானது இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடாது என்றும், சமூக ஊடகங்களில் இதுவரையில் உலா வருகின்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், நிதி முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சி காலத்தில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுதாரபுரம் எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ஸ்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
ஈரானில் உள்ள இலங்கை மற்றும் நேபாளம் நாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் நேபாள அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பணிகள் இடம்பெறுவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன்படி, ஈரானில் உள்ள இலங்கையர்களும் நேபாளம் மக்களும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.