ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதி தொடர்பில், கைது செய்யப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.