இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, போர் நிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. Read more
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொரளை, வனாத்தமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி முன்னெடுக்கப்படும் ‘அணையா தீபம்” போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் நாளை வரை தொடரும்.
யாழ்ப்பாணம், செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம், இன்றைய தினமும் இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர். செம்மணி பகுதியில் அமைந்துள்ள, யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் (23) அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கோரிக்கை கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.