 யாழ்ப்பாணம், செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம், இன்றைய தினமும் இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர். செம்மணி பகுதியில் அமைந்துள்ள, யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் (23) அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.

நேற்று மாலை நிகழ்வாக, செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஏற்றப்பட்டுள்ள அணையா தீபத்திற்கு, எண்ணெய் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்கள் என்பவற்றைத் தந்து உதவுமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.