இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, போர் நிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட ட்ரம்ப் TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். போர் நிறுத்ததத்தை மீற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கத்தாரில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளத்தின் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடிதான் இது என இரான் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக கூறியுள்ள டிரம்ப், இதனை மீற வேண்டாம் என இருநாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இரானும் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், ‘எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை’ என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இஸ்ரேல் தனது “சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை” இப்போது நிறுத்தினால், இரான் பதிலடியைத் தொடர எந்த நோக்கமும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் ஏற்கெனவே கடந்துவிட்டது:

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது இரானின் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ‘சண்டை நிறுத்தம்’ திணிக்கப்பட்டுள்ளது என இரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் சண்டை நிறுத்ததுக்கு ‘கெஞ்சினார்’ எனவும் இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது.