மித்தெனிய தோரகொலயாய பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை சம்பவம் இடம்​பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 25 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட இருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.