 யாழ்ப்பாணம் – செம்மணியில் நடைபெற்று வரும் “அணையா தீபம்” போராட்டத்திற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் சென்றவேளை, அங்கிருந்த போராட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா தீபம்” போராட்டம், இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் அங்கிருந்த போராட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் போராட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது