இலங்கையர்களுக்கான மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 27 June 2025
Posted in செய்திகள்
இலங்கையர்களுக்கான மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 27 June 2025
Posted in செய்திகள்
காணாமல் போன தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி, உனவட்டுன கடற்கரை பகுதியில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான தகவல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.Posted by plotenewseditor on 27 June 2025
Posted in செய்திகள்
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயல்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.
Posted by plotenewseditor on 27 June 2025
Posted in செய்திகள்
இந்தியாவில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தையடுத்தே, இலங்கையால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் சில கடல் பகுதிகளில் மீன்பிடி உரிமைகளை இந்தியா விட்டுக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Posted by plotenewseditor on 27 June 2025
Posted in செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபால இன்று தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.