29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை நியமிப்பதற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதம் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
தேயிலை, சுற்றுலாத்துறை மற்றும் பரந்த வர்த்தக நடவடிக்கைகள் குறித்து, இலங்கை அதிக கவனம் செலுத்த தவறியுள்ளதனால், ரஷ்யாவுடனான நெருக்கமான வர்த்தக ஒத்துழைப்பினை இலங்கை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, ரஷ்யாவில் நிலைகொண்டுள்ள இலங்கை வர்த்தக மற்றும் தொழில்முறை தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஜகத் சந்திரவன்சா தெரிவித்துள்ளார்.Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
பண்டாரவளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான மூவரும் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து, கல்லூண்டாய் பகுதி மக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகர சபையினர் தாம் சேகரிக்கும் கழிவுகளை கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுPosted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார். Read more
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பேங்கொக்கில் (Bangkok) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தாய்லாந்து பிரதமர் ஆகியோர் சர்ச்சைக்குரிய விடயங்களை தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில், தாய்லாந்து இராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.