சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்கள் தொடர்பில் வெளியான கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரித்ததுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகொட இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்களில் ஆயுதங்கள்,போதைப்பொருள் அல்லது தங்கம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரிக்கின்றது. Read more
வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின்
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் நிதி மோசடி குற்றச்செயலுடன் தொடர்புடைய அதுல என்பவர் விடுதலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.
யாழ்.காங்கேசன்துறை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் இன்றைய தினம் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த சிந்துஜா மற்றும் வேணுஜா ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான முறைமை இல்லாமல், அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
வவுனியா, ரம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டப் பகுதியில் இருந்து துருப்பிடித்த இரண்டு T-56 துப்பாக்கிகளும் 450 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுமானமொன்றிற்காகத் தோட்டப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உள்நாட்டு யுத்தத்தின் போது ஏதேனும் ஒரு அமைப்பு, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வாழைச்சேனையின் ஒரு காலத்தில் செயலிழந்த காகிதத் தொழிற்சாலை இப்போது லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதன் நீண்டகால கடன்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். உற்பத்தி திறனை விரிவுபடுத்த புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் 27 வயதான நபர், தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரது சடலம், வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.