Header image alt text

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலிஸ் ஓய்வறையில் T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை (06) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இறந்தவர் ஹசலகாவைச் சேர்ந்த   ஏ.எம். உபசேன அத்தநாயக்க (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். Read more

பிறந்து இரண்டு நாளேயான சிசுவை, ரூ.75,000-க்கு விற்க முயன்றதற்காக, மூன்று குழந்தைகளின் தாயான 46 வயதுடைய தாய்க்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வியாழக்கிழமை (05) விதித்தார். குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரி ஒருவருக்கு அந்த தாய், தனது குழந்தையை விற்க முயன்றுள்ளார். Read more

அஸ்வெசும கொடுப்பனவை  மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் வழங்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. திட்ட பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். 420,000 இடைநிலை குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் (ஓட்டோக்கள்) முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேனும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுகள்…

தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.

Read more

அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி இது தொடர்பில் உரையாற்றினார்.

Read more

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று காலை கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் ஆரம்பமானது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர். அத்துடன், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் சுற்றாடல் வாரத்தையும் அறிவித்துள்ளது. இதனிடையே சுற்றுலா விடுதிகளைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மையைப் பேணும் நோக்கில் விடுதி கடற்கரை பராமரிப்பாளர்களை நியமிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read more

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.