இஸ்ரேல் – காஸா விவகாரம் உள்ளடங்கலாக உலக நாடுகளில் நிலவும் தீவிர பிரச்சினைகளால் சர்வேதேச அரங்கில் இலங்கை விவகாரம் சற்று பின்தள்ளப்படக்கூடும் என தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை மீதான தமது அழுத்தம் தொடரும் என்றும் உறுதியளித் துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் இன்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் 2 பெண்களின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மூவரும் எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை சொகுசு தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வட புலத்தின் மூத்த பொதுவுடமைப் போராளி அமரர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியாளர் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இவர் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அமரர் தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன்) அவர்களின் அன்புத் தாயாரும், தீவிர இனப்பற்றாளரும், மொழி, மண், பண்பாடு என்பவற்றில் மிகுந்த பற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தவரும், சமூக நீதிக்கான தீவிர செயற்பாட்டாளருமாவார்.
கடந்த காலத்திலிருந்து மீண்டு நீதியான மற்றும் உறுதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் பயணம் தனது நாட்டு மக்கள் மாத்திரமின்றி முழு உலகும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக உள்ளதாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் கூறினார்.
தென்னாபிரிக்காவின் இரண்டாவது ஜனநாயக ஜனாதிபதியும் ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர்களில் ஒருவருமான தாபோ ம்பெக்கி இன்று(26) முற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மீளாய்வு விழாவில்(EOTY) பிரதம அதிதியாக பங்கேற்பதற்காகவே தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தருகிறார். கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் இந்த வருடத்திற்கான வருடாந்த மீளாய்வு விழா நாளை(27) நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி – சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். புதைகுழிகளைப் பார்வையிட சென்ற ஐ. நா உயர்ஸ்தானிகர், அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணம் – செம்மணியில் நடைபெற்று வரும் “அணையா தீபம்” போராட்டத்திற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் சென்றவேளை, அங்கிருந்த போராட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா தீபம்” போராட்டம், இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு சிறப்பு தர அத்தியட்சகர்கள், ஒரு சிறைச்சாலை அத்தியட்சகர், 8 உதவி அத்தியட்சகர்கள், மற்றும் 5 சிறைச்சாலை பதில் அத்தியட்சகர்கள் , ஆகியோருக்கு இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.