யாழ்ப்பாணம், செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம், இன்றைய தினமும் இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர். செம்மணி பகுதியில் அமைந்துள்ள, யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் (23) அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கோரிக்கை கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
நிதி அமைச்சின் புதிய செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டு இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அவர் சமீபத்தில் அந்த பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதி தொடர்பில், கைது செய்யப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk), இன்று மாலை நாட்டை வந்தடைந்தார். இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர், நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரையும், வடக்கு கிழக்கின் ஆர்வலர்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், கொழும்பிலும் சிவில் சமூகத்தினரையும், கர்தினாலையும் அவர் சந்திக்கவுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 36.9 மில்லியன் ரூபாய் வருமான வரியை செலுத்தாதமைக்கு எதிராக, உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் தாக்கல் செய்த வழக்கில் சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் இலவச விமான பயண வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்கு எதிர்பார்க்கும் இலங்கை பிரஜைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்வதற்கான செயற்பாடுகள் இன்றும்(23) நாளையும்(24) மாத்திரம் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் மைதானத்தில் லட்சுமணன் நற்பணி மன்றத்தினால் நடத்தப்பட்ட கிராமிய விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக எமது கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்) அவர்கள் கலந்து விழாவினை சிறப்பித்த போது….
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று(23) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதியமைச்சரின் தலைமையில் நீதியமைச்சில் இன்று(23) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.இதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் மற்றும் ஆணையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.