Header image alt text

இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  கடல்சார் கண்காணிப்பு மற்றும் அனர்த்த மீட்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த உதவியில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் நீதிகோரி அணையா தீபம் ஏற்றி, போராட்டமொன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய போராட்டமாக ‘அணையா தீபம்” என்ற பெயரில் குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி எதிர்வரும் 23 ஆம், 24 ஆம், 25 ஆம் திகதிகளில் செம்மணி வளைவு பகுதிகளில் அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்றதாகக் கூறப்படும் மூவர் தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Read more

இஸ்ரேலில் பணிபுரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் ஐவர் நாட்டிற்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்புவது இடை நிறுத்தப்பட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு செல்லவிருந்த 119 பணியாளர்கள் நாட்டில் உள்ளனர். Read more

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள போர்டோ நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது ட்ருத் சமூக வலைத்தள பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க விமானங்கள் ஈரான் வான்வௌியை விட்டு வௌியேறியுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.  கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கும், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ மற்றும் அதன் ஏனைய பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (21) நள்ளிரவு 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பரீட்சைகள் திணைக்களமானது இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடாது என்றும், சமூக ஊடகங்களில் இதுவரையில் உலா வருகின்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், நிதி முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சி காலத்தில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அநுதாரபுரம் எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ஸ்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

Read more

ஈரானில் உள்ள இலங்கை மற்றும் நேபாளம் நாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  இலங்கை மற்றும் நேபாள அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பணிகள் இடம்பெறுவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  இதன்படி, ஈரானில் உள்ள இலங்கையர்களும் நேபாளம் மக்களும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

வவுனியா மாநகரசபை மேயரும், எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், கட்சியின் தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளருமான ஆசிரியர் தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் நேற்று எமது கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்தித்துள்ளார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களையும் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

Read more