ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
தங்கமுலாம் பூசப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கி தம்மிடம் இருக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் பர்டி ப்ரேமலால் திசாநாயக்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி வௌிக்கொணர்ந்துள்ளார். குறித்த துப்பாக்கி பொலிஸ் மத்திய துப்பாக்கி களஞ்சியசாலையில் இருந்து வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று அல்ல என விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு மருந்தான ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொடிய பெக்டீரியா நீர் இருந்தமை நீதிமன்றத்தில் நேற்று(20) வௌிக்கொணரப்பட்டது. இந்த மருந்து தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் முடிவுகளை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு தெரிவித்தபோது இது தெரியவந்தது.
19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்தை நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டபோது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் கிராம அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9,190 வரை அதிகரித்துள்ளது. நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள தரவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று… இவர் கழகத்தின் உரும்பிராய் பிரதேச அமைப்பாளராக இருந்த காலங்களில், கழகத்தின் இராணுவ செயற்பாடுகளில் மாத்திரமன்றி வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தார்.
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் இன்று(18) தமது கடமைகளை பொறுப்பேற்றார். கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதியமைச்சர் சுனில் வட்டகல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் சர்வ மத ஆசீர்வாதத்துடன் மேயர் கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவும் இன்று(18) கடமைகளை பொறுப்பேற்றார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹாந்த அபேசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய இதற்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பிரதானியாக கடமையாற்றினார். இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.