முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) முற்பகல் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூவருக்கும் பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத்தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more
மாதம்பை பிரதேசத்தில் சிலிக்கா மணல் அகழ்விற்காக மீண்டும் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் சுற்றாடல் ஆய்வறிக்கையை கோருவதே உகந்தது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் மாதம்பை பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சுற்றாடல் நீதிக்கான மையம் மற்றும் பிரதேசவாசிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டு பணியாளரான நிபுனி கிருஷ்ணஜினா எனும் பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயசிங்க இன்று(17) பிணை உத்தரவை பிறப்பித்தார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் சமர்ப்பித்தது. சந்தேகநபர் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனையை முன்வைப்பதற்கு சட்ட மாஅதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று(17) கால அவகாசம் வழங்கியது.
இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியா மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யயப்பட்ட தோழர் காண்டீபன் மற்றும் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தோழர் அருண் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன் வவுனியா மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி ஆகியோர் மாநகர சபை ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கட்சியின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செயலதிபரின் நினைவில்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா மாநகரசபையின் முதலாவது மேயராக எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் (தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளர்) தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் இன்று தெரிவு செய்யப்பட்ட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு மாநகர ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று(16) காலை ஆரம்பமானது. தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தஸாரின் பெயரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீசா ஸரூக்கின் பெயரும் கொழும்பு மேயர் பதவிக்கு முன்மொழியப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று(15) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை துணை முகாமைத்துவ பணிப்பாளரொருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(15) முற்பகல் நாட்டை வந்தடைந்தார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனி ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வர்த்தக சபையின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்ததுடன் சுற்றுலாத்துறை பிரதானிகளையும் சந்தித்தார்.