யாழ் சுழிபுரம் மேற்கைச்சேர்ந்த வி.கதிரவேலு (இளைப்பாறிய நிர்வாகசபை உத்தியோகத்தர், அரசினர் வைத்தியசாலை, வவுனியா) அவர்கள் 17/10/2025 வெள்ளிக்கிழமை காலமானார். இவர் அமரர் தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் அன்புத் தந்தையும், கழகத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரும், ‘புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான அமரர் தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் அன்பு மைத்துனரும் (சகோதரின் கணவர்) ஆவார்.
18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..