யாழ் சுழிபுரம் மேற்கைச்சேர்ந்த வி.கதிரவேலு (இளைப்பாறிய நிர்வாகசபை உத்தியோகத்தர், அரசினர் வைத்தியசாலை, வவுனியா) அவர்கள் 17/10/2025 வெள்ளிக்கிழமை காலமானார். இவர் அமரர் தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் அன்புத் தந்தையும், கழகத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரும், ‘புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான அமரர் தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் அன்பு மைத்துனரும் (சகோதரின் கணவர்) ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள விடுதலை முன்னணி DPLF)
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 19/10/2025 ஞாயிற்றுக்கிழமை வவுனியா பண்டாரிகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் 10.00 மணியளவில் நடைபெறும்.