யாழ்ப்பாணத்தில் வாள் , நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் செயற்பாட்டை தாம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.