மன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் மற்றும் இராமேஷ்வரத்திற்கு இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த இறங்குதுறை விரைவாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார். அண்மையில் மன்னார் இறங்குதுறையை சூழவுள்ள பகுதியை துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.
முதலீட்டாளர்களினால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளை கவனத்திற்கொண்டு பொருத்தமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கையொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.