இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி W.M.N.P.நீல் இத்தவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சைத்ய குணசேகர மற்றும் பர்னார்ட் ராஜபக்ஸ ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.