கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு மோதலில் ஈடுபட்ட 34 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகளுக்கு இடையில் பல தடவைகள் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.