ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார். குறித்த மாநாடு அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் இந்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.