ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) இனது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று மாலை இணையவழியில் நடைபெற்றது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிய நிலையில், கூட்டமைப்பின் மீதிக் கட்சிகளாக இருந்த புளொட், ரெலோ ஆகிய அமைப்புகள், கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) எனும் பெயரில் குத்துவிளக்கை பொதுச் சின்னமாகக் கொண்டு பயணிக்கத் தொடங்கி ஓராண்டுகள் கடந்து விட்ட நிலையில், கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) இன் மாவட்டக்குழுக்களின் நியமனம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்துவது பற்றிய தமிழ்ச் சமூகத்தின் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் போன்ற விடயங்கள் குறித்தும் பேசப்பட்டன.
மீண்டும் ஒரு மாத இடைவெளியில் கூட்டமைப்பின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டது.